காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்எழுதியவர், ஆ. நந்தகுமார் பதவி, பிபிசி தமிழ் 7 ஜூலை 2025, 02:50 GMT

புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இது, போலீசாரின் விசாரணை முறைகள் மற்றும் விசாரணையின்போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து மற்றுமொரு விவாதத்தைத் தூண்டியுள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNS மற்றும் BNSS) சட்டங்கள் காவல் விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கு சில சட்டப்பூர்வமான பாதுகாப்புகளை வழங்குகின்றன.

ஒரு குடிமகனை போலீசார் விசாரணைக்கு அழைக்கும் போதோ அல்லது கைது செய்யும்போதோ நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? மக்களுக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு என்ன?

போலீஸ் விசாரணைக்கு அழைத்தால் என்ன செய்யலாம்?

முதலில் வழக்கின் முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) பதிவாக வேண்டும். இந்த வழக்கில் ஒரு நபர் சந்தேக நபராக இருந்தாலோ, சாட்சியாக இருந்தாலோ போலீசார் அந்த நபரை விசாரணைக்கு அழைக்கலாம்.பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டம் பிரிவு 35(2) -ன்படி போலீசார் ஒருவரை விசாரணைக்கு அழைக்க வேண்டுமென்றால், சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரி எழுத்துப்பூர்வ நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அதில் வழக்கு குறித்த விவரங்கள் மற்றும் சட்டப்பிரிவுகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட நபர் வழக்கறிஞர் உடனோ அல்லது தனியாகவோ விசாரணைக்கு ஆஜராகலாம்.”சட்டப்படி, தெளிவான காரணத்தைக் கூறாமல் ஒருவரை விசாரணைக்கு அழைக்கவே முடியாது.” என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. மேலும், ”வழக்கில் தான் சந்தேக நபரா அல்லது சாட்சியா என அறியும் உரிமை சம்மந்தப்பட்ட நபருக்கு உள்ளது.” என்கிறார் அவர்.

படக்குறிப்பு, போலீஸ் காவலில் தந்தை – மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்து ஐந்தாண்டுகளாகி விட்டன.பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 38ன்படி, விசாரணைக்கு முன்போ அல்லது விசாரணையின் போதோ வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும் உரிமை சம்மந்தப்பட்ட நபருக்கு உள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

” முமு விசாரணையின் போதும் வழக்கறிஞர் உடன் இருக்க முடியாவிட்டாலும், குறிப்பிட்ட இடைவேளையில் வழக்கறிஞரைச் சந்திக்க அனுமதிக்கப்படும்” என்கிறார் புகழேந்தி.

”ஒரு வேளை விசாரணைக்கு ஆஜராகும்போது, போலீசார் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா கட்டாயப்படுத்தினால் பேசாமல் அமைதியாக இருப்பதற்காக உரிமை சம்மந்தப்பட்ட நபருக்கு உள்ளது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 20(3)-ன்படியும், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 38ன்படியும் நான் பேசாமல் அமைதியாக இருக்கவும், வழக்கறிஞரிடம் பேசவும் முடிவெடுத்துள்ளேன் என கூறலாம்” என்கிறார் அவர்.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 35(7)ன்படி, பெண், முதியவர் அல்லது மாற்றுத்திறனாளி எனில், அவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு வரச்சொல்லக் கூடாது. அவர்களின் வீட்டுக்கே சென்று போலீசார் விசாரிக்க வேண்டும்.மாஜிஸ்திரேட்டின் முன் அனுமதி இருந்தால் மட்டுமே அவர்களை விசாரணைக்குக் காவல் நிலையத்திற்கு அழைக்கலாம்.பெண்கள் விசாரிக்கப்படும் போது கட்டாயம் பெண் போலீசார் இருக்க வேண்டும் என்கிறது இச்சட்டத்தின் பிரிவு 43(3.)

பட மூலாதாரம், Getty Images

எப்போது கைது செய்யலாம்?

முதல் தகவல் அறிக்கை பதிவாகி, அது 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கக் கூடிய குற்றமாக இருந்தால் (திருட்டு, கொலை) சம்மந்தப்பட்ட நபரை காவல்துறை கைது செய்யலாம் என்கிறது சட்டம்.

7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை கிடைக்கக்கூடிய வழக்காக இருந்தால், காவல்துறை கைது நடவடிக்கையை தவிர்த்து நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டிஸ் மட்டுமே அனுப்ப வேண்டும் என்கிறது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டம் பிரிவு 35. ஒரு வேளை சம்மந்தப்பட்ட நபர் ஒத்துழைக்கவில்லையெனில் மட்டுமே கைது செய்யலாம்.

அதேபோல, ”7 ஆண்டுகளுக்குக்கு குறைவாகத் தண்டனை கிடைக்கக் கூடிய சிறு குற்றமாக இருந்தாலும், ஒரு வேளை சம்மந்தப்பட்ட நபர் சாட்சியைக் கலைப்பார், மீண்டும் அந்த குற்றத்தைச் செய்வார் என காவல்துறை கருதினால் கைது செய்யலாம்” என்கிறார் புகழேந்தி.

இப்படி சிறிய குற்றம் செய்த ஒருவரை காவல்துறை கைது செய்ய நினைத்தால், ‘ஏன் அந்தக் கைது அவசியம்’ என்பதற்கான எழுத்துப்பூர்வ காரணத்தைப் பதிவு செய்ய வேண்டும். இது Recorded Justification என அழைக்கப்படுகிறது. இந்த பதிவு பின்னர் நீதிமன்றத்தால் பகுப்பாய்வு செய்யப்படும்.

ஏமாற்றுதல், சொத்துத் தகராறுகள், அடிதடி போன்ற சிறிய வழக்குகளில் தேவையில்லாத கைதுகளைத் தவிர்க்க இந்த உதவுகிறது என்கிறார் புகழேந்தி.

படக்குறிப்பு, திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.கைது நடவடிக்கையின் போது காவல்துறை செய்ய வேண்டியது என்ன?

கடுமையான குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ய வேண்டும் என காவல்துறை நினைத்தால் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 35, 36, மற்றும் 51-ன்படி, சம்மந்தப்பட்ட நபரிடம் அவருக்கு தெரிந்த மொழியில் கைதுக்கான காரணத்தை குறிப்பிட வேண்டும்.சம்மந்தப்பட்ட நபரிடம் கைது ஆணையை காட்ட வேண்டும்.கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் அல்லது உறவினர்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.வழக்கறிஞரிடம் பேச அனுமதிக்க வேண்டும்.போலீஸ் காவலுக்கு முன்பும் பின்பும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.24 மணி நேரத்துக்குள் மாஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்த வேண்டும் என்கிறது சட்டம்.மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மாஜிஸ்திரேட்டின் அனுமதி இல்லாமல் பெண்களை கைது செய்ய முடியாது.முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.” முதல் தகவல் அறிக்கையில் ஒருவது பெயர் இடம்பெற்றுள்ளது என்பதற்காகவே போலீசாரால் கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. அதற்கான தேவையையும் காரணத்தையும் தெளிவாக விளக்கிட வேண்டும்” என்கிறார் புகழேந்தி.

”கைதின் போது காவல்துறை இந்த நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லையென்றால், நீதிமன்றத்தில் முறையிடலாம்” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கைது செய்யப்பட்டவர்களை 24 மணி நேரத்துக்குள் மாஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்த வேண்டும் என்கிறது சட்டம்.பிணை பெறும் உரிமை

சட்டவிதிகளை மீறி தான் கைது செய்யப்பட்டதாக ஒருவர் கருதினால் அதற்கான காரணத்தைக் கூறியே பிணை கோரலாம் என்கிறார் புகழேந்தி.

நீதித்துறை மஜிஸ்திரேட், செஷன்ஸ் நீதிமன்றம், மாநில மனித உரிமைகள் ஆணையம் போன்றவற்றில் தவறாகக் கைது செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்கலாம் என்கிறார் அவர்.

தாக்கப்பட்டால் என்ன செய்வது?

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் அல்லது கைது செய்யப்பட்ட நபர் காவல் துறையினரால் தாக்கப்பட்டால் மாநில மனித உரிமை ஆணையத்திடமும் மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம் அல்லது உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்கிறார் புகழேந்தி.

காவல்துறை அதிகாரி அடித்து வாக்குமூலம் பெற்றால், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 73-ன்படி குற்றம் செய்த அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். கடும் தாக்குதலில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். அதேபோல் போலீஸ் கஸ்டடியில் ஏற்படும் இறப்புக்கும் பிரிவு 103- ன்படி கடும் தண்டனை கிடைக்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காவல்துறை அதிகாரி அடித்து வாக்குமூலம் பெற்றால், குற்றம் செய்த அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்’மக்கள் கேட்க வேண்டும்’

”முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யாமலே புகார் மட்டும் பெற்றுக்கொண்டு விசாரிக்கும் வழக்கம் காவல் நிலையங்களில் உள்ளது. காவல் நிலையத்திலிருந்து அழைத்து விசாரணைக்குக் கூப்பிட்டால் சம்மன் இருக்கா? அழைப்பாணை இருக்கா? என முதலில் மக்கள் கேட்க வேண்டும். பிறகுதான் விசாரணைக்குச் செல்ல வேண்டும்.” என்கிறார் மதுரை ‘எவிடென்ஸ்’ அமைப்பின் கதிர்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை அவருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தக் கூடாது என இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 20 கூறுகிறது. ஆனால் பெரும்பாலான விசாரணை இதற்கு மாறாகத்தான் உள்ளது என்கிறார் அவர்.

”ஒருவர் கைது செய்யப்படும்போது காவலர்கள் கவனிக்கவேண்டிய 11 வழிகாட்டுதல்களை டி கே பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் 1997-ல் வெளியிட்டது. சீருடை அணிந்திருக்க வேண்டும், பெயர் பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும், கைது குறிப்பு கொடுக்க வேண்டும், கைதின் போது குடும்ப உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும், வெளி மாநிலத்தில் கைது செய்யப்பட்டால் 12 மணி நேரத்துக்குள் குடும்பத்துக்குச் சொல்ல வேண்டும் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்கள் உள்ளன.” என்கிறார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு