மலையக உறவுகளிற்கு தொடர்ந்து அழைப்பு!

by ilankai

மலையக தமிழ் மக்களை வடக்கில் குடியேறுவதற்கான அழைப்பு தொடர்ச்சியாக வடக்கிலிருந்து விடுக்கப்பட்டுவருகின்றது.மலையக தமிழ் உறவுகளை இனியும் ஆபத்தான மலை விளிம்புகளில் இருக்காமல் வடக்கிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்; சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் ஆறு.திருமுருகன் .மலையக தமிழ் மக்களிடம் நாங்கள் நிலம் தருகிறோம். நீங்கள் வடக்கில் வந்து குடியேறுங்கள், வடக்கில் எவ்வளோ பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. வடக்கில் எவ்வளவோ நிலம் இருக்கின்றது என்று அவர்களை நாம் கூப்பிட வேண்டும் அதுவே மனித நேயம், அதுவே தர்மமாகும்.மலையகத்திலிருந்து தமிழ் மக்கள் யாராவது வடக்கில் குடியேற வந்தால், எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் அவர்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதற்கு எங்களை நாம் தயாராக்க வேண்டும். அதற்கு எம்மை போன்றவர்கள் பூரண ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கின்றோம். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பு வரும் என்றும் ஆறுதிருமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts