போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடிய மூன்று சந்தேக நபர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அதன்படி, தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் நேற்று (03) மாலை இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்ததும் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேக நபர்கள் 33 வயதான மதிவெலகே அசித்த சாகர துனதிலக, 44 வயதான சில்பத்சாரிகே சுமித் ரோலண்ட் பெர்னாண்டோ மற்றும் 34 வயதான செல்வராஜ் கபிலன்  என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதல் இரண்டு சந்தேக நபர்கள் புத்தளம் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், அவர்களை புத்தளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.