4
திருகோணமலையில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிண்ணியாவை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தனது பெற்றோரின் வீட்டுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்று விட்டு , கிண்ணியாவில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த வேளை, சீனக்குடா பகுதியில் இராணுவ வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , விபத்து தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.