Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கையில் 1979 ஆம் ஆண்டுகாலப்பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் தெரிவித்துள்ளார்.
“1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட்டு சட்டமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், அது இன்றளவிலும் நீடிக்கின்றது.
இந்நிலையில் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது அனைத்து கருத்துகள் – யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றது. பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன.
அந்தவகையில் செப்டம்பர் மாதமளவில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கருத்து சுதந்திரம், அரசியல் சுதந்திரம், அடையாளம் என்பவற்றை பாதுகாக்கும் வகையிலும் சர்வதேச நியமனங்களுக்கு அமையவும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையிலுமே புதிய சட்டத்தை இயற்ற எதிர்பார்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பழைய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இருந்த விமர்சனங்கள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படும்.
அதேவேளை, நூதன பூகோல பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்குரிய சட்ட பாதுகாப்பு கவசமும் அவசியம். அதற்குரிய ஏற்பாடும் செய்யப்படும்.” – என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.