Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘240 கிலோமீட்டர் வேகம்’ – விமானத்தின் மேலே நின்றபடி பறந்த 88 வயது மூதாட்டிகாணொளிக் குறிப்பு, 88 வயதில் விமானத்தில் ‘ஃபுட்போர்ட்’ அடித்த 88 வயது மூதாட்டி’240 கிலோமீட்டர் வேகம்’ – விமானத்தின் மேலே நின்றபடி பறந்த 88 வயது மூதாட்டி
42 நிமிடங்களுக்கு முன்னர்
பிரிட்டனைச் சேர்ந்த கில் கிளே, தனது 88வது வயதில் ஒரு பை-ப்ளேன் மேலே, கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில் நின்றவாறு பறந்துள்ளார். கில்லை ஏற்றிச் சென்ற அந்த பை-ப்ளேன் மணிக்கு சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது.
இளைஞர்களை சாகசங்கள் புரிய ஊக்குவிக்கும் ஒருவராக தாம் இருக்க வேண்டுமென்று கில் கிளே கூறினார். வாழ்நாள் முழுவதும் ஸ்கவுட்ஸில் உறுப்பினராக இருந்தவர் கில். வேல்ஸில் செயல்படும் அந்த இயக்கத்திற்குத் தனது சாகசத்தின் மூலம் நிதி திரட்டினார். ஸ்கவுட்ஸ் என்பது பிரிட்டனில் துவங்கப்பட்ட இளைஞர்களுக்கான ஓர் இயக்கம். இப்போது உலகளவில் பரவி, முறைசாரா கல்வி மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு