இலங்கையில் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் இன்றுவரை 635 பேரது உடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (08); வெளியிட்ட அறிக்கையில் தகவல்; தெரிவிக்கப்பட்டுள்ளது.கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதுவெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்டு இதுவரை 192 பேர் காணாமற் போயுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 89 உயிரிழப்புகளும், பதுளை மாவட்டத்தில் 90 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.அத்துடன் குருநாகலில் 61 உயிரிழப்புகளும் கேகாலை மாவட்டத்தில் 32 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. புத்தளத்தில் 37 உயிரிழப்புகளும் மாத்தளை மாவட்டத்தில் 28 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.இதனிடையே சீரற்ற காலநிலையினால் 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், 22,218 குடும்பங்களைச் சேர்ந்த 69,861 நபர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4
previous post