Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வாங்கியது. தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பயனர்களின் தேவைக்கு ஏற்ப வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காமல் விடுத்த மெசேஜ்களை (Unread Messages) மெட்டா ஏ.ஐ. மூலம் சுருக்கி தரும் (Summarise) அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு வரும் பர்சனல் மற்றும் குரூப் மெசேஜ்களை படிக்காமல் இருந்தால் அதை மெட்டா ஏ.ஐ. சுருக்கமாக மாற்றி தரும். இதன் மூலம் நீண்ட டெக்ஸ்ட் மெசேஜ்களை நெடுநேரம் ஸ்க்ரோல் செய்து பயனர்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அந்த மெசேஜ்கள் செய்திக்குறிப்பு போல மாற்றப்பட்டு இருக்கும் எனவும் மெட்டா தெரிவித்துள்ளது.
அதே சமயம், வாட்ஸ்அப் பயனர்கள் மெட்டா ஏ.ஐ. சாட்பாட்டுக்கு படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றித் தரும்படி கட்டளையிட்டால் (Prompt) மட்டுமே மெட்டா ஏ.ஐ. அதை செய்யும். மேலும் இந்த மெசேஜ்கள் அனைத்தும் பிரைவேட்டாகவே இருக்கும் என்றும், அது மெட்டா நிறுவனத்தின் சர்வர்கள் அல்லது வாட்ஸ்அப் சிஸ்டத்தில் ஸ்டோர் ஆகாது எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மெட்டா ஏ.ஐ. மாடல்கள் கூட இந்த மெசேஜ்களை ஸ்டோர் செய்யாது என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.
இந்த அம்சத்தை பயனர்கள் மேனுவலாக ‘சாட்’ செட்டிங்ஸில் ஆன் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இப்போதைக்கு இந்த அம்சம் அமெரிக்காவில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிமுகமாகி உள்ளது. மேலும், ஆங்கில மொழியில் உள்ள மெசேஜ்களை மட்டுமே இப்போதைக்கு மெட்டா ஏ.ஐ. சுருக்கி தருகிறது. வரும் நாட்களில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தும் வகையில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.