யாழில். வீதி மின் விளக்கினை திருத்த முற்பட்டவர் மின்சாரம் தாக்கி படுகாயம்

ஆதீரா Tuesday, July 01, 2025 யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை,  வீதி மின்விளக்குகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கியுள்ளது.

மின்சார தாக்குதலுக்கு உள்ளான ஊழியரை சக ஊழியர்கள் மீட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Related Posts

யாழ்ப்பாணம்

NextYou are viewing Most Recent Post Post a Comment