Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் இன்றைய தினம் செவ்வாய்க்க்கிழமை (01.07.25) மாவட்ட செயலர் ம பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலதிக அரசாங்க அதிபராக கடமையேற்ற கே. சிவகரன் அவர்கள் முன்னர் வேலணை பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் . மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனுக்கு பிரியாவிடை!
வலுசக்தி அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் க.ஸ்ரீமோகனுக்கு சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் , வாழ்த்துரைகளை தொடர்ந்து, மாவட்ட செயலரினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்