Thursday, August 21, 2025
Home யாழ்ப்பாணம்வெளிநாட்டில் இருந்ததால் , அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை

வெளிநாட்டில் இருந்ததால் , அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை

by ilankai
0 comments

செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. உண்மை கண்டறியப்பட வேண்டுமானால் இந்த மனிதப் புதைகுழிகளை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும்.

banner

 அதனால்தான் ‘அணையா விளக்கு’ போராட்டம் அறிவிக்கப்பட உடனேயே அதற்கு ஆதரவு தெரிவித்து எமது கட்சியினரும் பெருந் தொகையாக கட்சி அடையாளங்களைத் தவிர்த்து அதிலே கலந்து கொண்டார்கள். 

நான் வெளி நாட்டிலே இருந்த காரணத்தினால் என்னாலும் வேறு சிலராலும் இதில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியவில்லை.

 இந்த மனிதப் புதைகுழியும் வடக்கு கிழக்கிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றைய மனிதப் புதை குழிகளும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையோடு சரியான முறையிலே அகழாய்வு செய்யப்பட வேண்டும். விஞ்ஞான பூர்வமாக இது அனுகப்பட வேண்டும்.

இதற்கான முயற்சிகளை சர்வதேச நிறுவனங்களுடன் நாம் தொடர்ச்சியாகச் செய்து வருகிறோம். மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாயில் தற்போது கைவிடப்படதைப் போல் இந்த விடயங்களை மூடி மறைக்க நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. – என்றுள்ளது.

You may also like