Thursday, August 21, 2025
Home யாழ்ப்பாணம்வடகிழக்கு விற்பனைக்கு!

வடகிழக்கு விற்பனைக்கு!

by ilankai
0 comments

வடகிழக்கினை காண்பித்து தேசிய மக்கள் சக்தியும்  தனது கல்லா கட்டும் தொழிலை ஆரம்பித்துள்ளது.யுத்த பாதிப்பிற்குள்ளான வடகிழக்கிற்கான சர்வதேச உதவிகள் கடந்த காலங்களில் தெற்கு ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டு வந்த நிலையில்தேசிய மக்கள் சக்தியும் கடைவிரிக்க தொடங்கியுள்ளது

உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று இன்றைய கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது. 

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்  அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) நடைபெற்றது. 

உலக வங்கியால் வடக்கு மாகாணத்திற்கு பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பயணம் மற்றும் அதிகாரிகள், மக்கள் சமூகங்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 8 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 7 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

banner

யாழ். மாவட்டத்தில் 3 வலயங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 வலயங்களும் வடக்கின் ஏனைய 3 மாவட்டங்களில் தலா ஒரு வலயங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலமும் முன்மொழிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது. உலக வங்கியால் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம் ஆகிய 4 விடயப் பரப்புக்களின் கீழ் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதுடன் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதல் கட்ட செயற்படுத்தலுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

You may also like