Thursday, August 21, 2025
Home யாழ்ப்பாணம்வெடியன் இளங்குமரனும் நமுத்துப்போன பட்டாசுகளும்!

வெடியன் இளங்குமரனும் நமுத்துப்போன பட்டாசுகளும்!

by ilankai
0 comments

யாழ்ப்பாணத்து வெடியன் இளங்குமரனின் வெடிகள் நாள் தோறும் புஸ்வாணமாக வெடித்த வண்ணமேயுள்ளது.தனது முகநூலில் ஆதரவு குண்டர்கள் சகிதம் பிரச்சாரங்களை முடுக்கவிடுவது இளங்குமரனின் வழமையாகும் ஆனால் விடும் வெடிகள் ஒரு நாளிலேயே பொய்த்துப்போவது தொடர்கின்றது

பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு  கட்டுப்பாடுகள் இன்றி  வழிபட அனுமதித்த இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. 

ஏற்கனவே ஆலயத்துக்கு செல்லவென பிரத்தியோகமாக அமைத்த பாதையிலேயே இராணுவத்தினர் மூடி முட்கம்பி வேலி தடையை அமைத்துள்ளனர்

இதனால் ஆலயத்திற்கு  சனிக்கிழமை வழிபட சென்ற மக்கள் இராணுவத்தினர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்காததால் முட்கம்பி முன்பாக தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி பூப்போட்டு வழிப்பட்டனர். 

banner

மக்கள் இந்த அம்மன் ஆலயத்துக்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கபடாதது தொடர்ந்தும் அலைச்சல்படுத்தும் நிலையே ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறான தடையால் வழமைபோன்று வெள்ளிக்கிழமை மற்றும் விசேட நாட்களில் பூசைகளுக்கு பதிவு நடவடிக்கை மேற்கொண்டே செல்லவேண்டிய சூழ்நிலையே மீண்டும் ஏற்பட்டுள்ளது.

You may also like