Wednesday, August 20, 2025
Home பிபிசிதமிழிலிருந்துஇஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான இரான் அரசு டி.வி. அலுவலகம் எப்படி உள்ளது? – BBC News தமிழ்

இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான இரான் அரசு டி.வி. அலுவலகம் எப்படி உள்ளது? – BBC News தமிழ்

by ilankai
0 comments

இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான இரான் அரசு டி.வி. அலுவலகம் எப்படி உள்ளது? காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலில் முற்றிலும் சேதம் அடைந்த இரானின் அரசு தொலைக்காட்சிக் கட்டடம் – காணொளிஇஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான இரான் அரசு டி.வி. அலுவலகம் எப்படி உள்ளது?

14 நிமிடங்களுக்கு முன்னர்

இது இரானின் அரசு தொலைக்காட்சி கட்டடம். இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இது சேதமடைந்தது. ஸ்டூடியோக்களின் பெரும் பகுதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. நேரலையின் போது இரான் தாக்குதலால் செய்திவாசிப்பாளர் பாதியில் வெளியேறினார்.

இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரான் அதிஉயர் தலைவர் வியாழக்கிழமை ஒரு உரையை நிகழ்த்தினார்.

banner

அதில் “இரான் தேசிய உறுதியுடன் சரணடைதலை நிராகரிக்கிறது. இது போன்ற ஒரு நாட்டுக்கு, இரானிய தேசத்தை உண்மையிலேயே அறிந்த எவருக்கும் சரணடைதல் என்ற யோசனை நகைப்புக்குரியதாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

அவரது உரை காட்டமாக இருந்தது. ஆனால் சேதமடைந்து கிடக்கும் இந்த ஸ்டூடியோ இரானின் இருண்ட தருணத்தை காட்டுகிறது. அதி உயர் தலைவர் நாற்பது ஆண்டுகால ஆட்சியில் எடுத்த முடிவுகளுக்கான கடினமான மற்றும் ஆபத்தான விளைவுகளை எதிர்கொண்டு வருகிறார்.

டெஹ்ரானில் இயல்புநிலை திரும்பியது போல தெரிகிறது. மக்கள் திரும்பி வருகிறார்கள், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. சந்தைகளில் மக்கள் கூட்டம் உள்ளது. ஆனால், இந்த மருத்துவமனையில் இருக்கும் பலர் இந்த மோதல் குறித்து அச்சம் கொண்டுள்ளனர். எவின் சிறைச்சாலை மீது குண்டு வீசப்பட்டபோது தான் காயமடைந்ததாகக் கூறும் இந்த நபர், இஸ்ரேல் இலக்குகள் தேர்ந்தெடுத்த விதத்தை விமர்சிக்கிறார்.

எரிந்து போன தொலைக்காட்சி ஸ்டுடியோ, இரானுக்கு அமெரிக்காவுடன் உள்ள கடினமான உறவை காட்டுகிறது. அணு குண்டை உருவாக்க முயற்சிப்பதாக இரான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இரானோ அதை நிராகரிக்கிறது.

வியாழக்கிழமை காமனெயி கூறியது என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like