இலங்கையில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில், உலக வங்கி (World Bank) ஒரு புதிய நிதியுதவித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து இந்தத் திட்டம், நாட்டிலுள்ள முக்கியமான சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பசுமை மற்றும் நீடித்த (Sustainable) வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக உலக வங்கி, 130 மில்லியன் அமெரிக்க டொலர் (தோராயமாக இலங்கை மதிப்பில் சுமார் (4,200 கோடி ரூபா ) நிதியை வழங்குகிறது. இந்த நிதி, நாட்டின் இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் நிலையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் நாட்டின் பல்லுயிர் வளம் மற்றும் காட்டுப் பகுதிகள் மேம்படுத்தப்படும், மழைநீர் மற்றும் நிலத்தடி நீரைச் சேமித்து, திறமையான நீர் நிர்வாக உத்திகள் உருவாக்கப்படும்.கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் மீன்பிடிச் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப்படும் . அத்துடன் நாட்டின் வளர்ச்சியில் சுற்றுச்சூழல் சார்ந்த, நீடித்த உத்திகளை ஒருங்கிணைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. உலக வங்கியின் இந்த ஆதரவு, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட ஊக்கமளிப்பதாகக் கருதப்படுகிறது.
பசுமை வளர்ச்சித் திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு – Global Tamil News
3