இன்று முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விசேட சலுகை  – Global Tamil News

by ilankai

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்   நிறுவனம், பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கில், இன்று முதல் (டிசம்பர் 05, 2025) ஒரு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (Official Website) விமானச் சீட்டுகளை பதிவு செய்பவர்களுக்கு இந்த விசேட சலுகை வழங்கப்படும்.  பதிவு செய்யும் பயணிகளுக்கு விமானச் சீட்டின் மொத்த விலையில் 15% கழிவு (15% Discount) வழங்கப்படும் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சலுகை இன்று (டிசம்பர் 05) முதல் டிசம்பர் 10, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த சலுகைக் காலத்தில் பதிவு செய்யப்படும் விமானச் சீட்டுகளைக் கொண்டு, எதிர்வரும் டிசம்பர் 05, 2025 முதல் 2026 மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில் நீங்கள் பயணிக்க முடியும். உடனடியாகப் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு செல்லத் திட்டமிடும் பயணிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்!

Related Posts