திராவிட இயக்கத்தின் மூத்த, புகழ்பெற்ற பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத், இன்று (05.12.25) தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் தளபதி விஜய் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். இந்த இணைவு தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே, மக்கள் நலன் சார்ந்த விஜயின் கருத்துக்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளுக்கும் நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, பல்வேறு ஊடகங்களிலும் பேசி வந்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாரப்பூர்வமாக அவர் தவெகவில் இணைந்திருக்கிறார். பல ஆண்டுகால அரசியல் மற்றும் மேடைப் பேச்சு அனுபவம் கொண்ட திரு. நாஞ்சில் சம்பத் அவர்களின் இணைவு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயல்பாடுகளுக்குப் பெரும் பலத்தை அளிக்கும் என கூறப்படுகிறது. அவரது அனல் பறக்கும் பேச்சுக்களும், ஆழமான கருத்துக்களும் தவெக-வின் செய்திகளை தமிழகத்தின் கடைக்கோடி மக்களிடமும் விரைவாகக் கொண்டு சேர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசியல் விவாத மேடைகளில் கழகத்தின் குரல் மேலும் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் ஒலிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாஞ்சில் சம்பத்தின் இணைவால் தவெக மேலும் பலம் பெறுமா? 🔥 – Global Tamil News
2