திருகோணமலை மாவட்டம், கிண்ணியா கண்டல்காடு பகுதியில் நேற்று (டிசம்பர் 04) 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மாவிலாறு குளத்தின் அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, நீரில் மூழ்கியிருந்த கிண்ணியா பிரதேசத்தில் தற்போது வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளதனால் , அப்பகுதியைச் சுத்தம் செய்யும் போதுதான் இவ்வாறு 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ள இந்த கைக்குண்டுகள் உடனடியாக சிறப்பு அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு வரவழைக்கப்பட்டு, மீட்கப்பட்ட குண்டுகள் பாதுகாப்பாகக் கையாளப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவைப் பெற்று, இவற்றைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினா் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
கண்டல்காட்டில் 36 கைக்குண்டுகள் மீட்பு – Global Tamil News
5