நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம்! – Global Tamil News

by ilankai

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்றைய தினம் புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான  நேற்றைய தினம்  மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்று, வள்ளி, தேவசேனா சமேதராக தங்கமயில் வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நல்லூர் முருகப் பெருமான் வெளிவீதியுலா வந்தமை சிறப்பாக நடைபெற்றது. Spread the love  திருக்கார்த்திகை உற்சவம்நல்லூர் கந்தசுவாமி ஆலயம்

Related Posts