டிட்வா  புயலால் 275,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு – Global Tamil News

by ilankai

பாரிய அழிவை ஏற்படுத்திய  டிட்வா  புயலால் இலங்கையில் சுமார் 275,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய இலங்கைக்கான பிரதிநிதி எமா பிரகாம்   தெரிவித்துள்ளார்.   யூனிசெஃப் மேற்கொண்ட ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளார். பல பகுதிகளில் இன்னும்  வீதி மற்றும் தகவல் தொடர்புகளில்  தடைகள் நிலவுவதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் அவா்  தெரிவித்துள்ளார். இந்த டிட்வா  புயலால்     குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டுள்ளமை குறித்து யூனிசெஃப்  கவலை வெளியிட்டுள்ளது.

Related Posts