கடற்பாதை உபகரணங்கள் குறிகட்டுவானை செற்டைந்தது. – Global Tamil News

கடற்பாதை உபகரணங்கள் குறிகட்டுவானை செற்டைந்தது. – Global Tamil News

by ilankai

  யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் – நயினாதீவு இடையில் புதிய கடற்பாதைக்கான உபகரணங்கள் குறிகாட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கட்டட பொருட்கள் , உள்ளிட்ட பொருட்கள் , வாகனங்கள் என்பவற்றை கொண்டு செல்வதற்கு பல இன்னல்கள் காணப்பட்ட நிலையில் , கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கடற்பாதை சேவை இடம்பெற்றது. குறித்த கடற்பாதை நீரில் மூழ்கியமையால் , மீண்டும் பொருட்களை எடுத்து செல்வதில் நயினாதீவு மக்கள் இன்னல்களை எதிர்கொண்டு , பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகளிலும் , படகுகளை வாடகைக்கு அமர்த்தியும் பொருட்களை எடுத்து சென்று வந்தனர். இந்நிலையில் மீண்டும் கடற்பாதை சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கையை முன் வைத்து வந்த நிலையில்  , தற்போது புதிய கடற்பாதைக்காக உபகரணங்கள் குறிகட்டுவான் பகுதிக்கு கனரக வாகனங்கள் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளன. குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்ட கடற்பாதை உபகரணங்களை இன்றைய தினம் புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

Related Posts