நயினாதீவில் மின் இயந்திரம் பழுது – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

by ilankai

நயினாதீவில் மின் இயந்திரம் பழுது – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒரு  மின் இயந்திரம் பழுதடைந்துள்ளது. மின் இயந்திரம் ஒன்று பழுதடைந்துள்ளதால்  தற்போது சிறிய மின் இயந்திரம் மூலமே மின்சாரம் வழங்கப்படுவதனால், பொது மக்கள் தங்கள்  மின் பாவனையை சிக்கனமாக பாவிக்குமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. குறிப்பாக இரவு 12:00 மணியிலிருந்து அதிகாலை 05:00மணி வரையும் தேவையற்ற மின்பாவனைகளை குறைத்து ஒத்துழைக்கும்  பட்சத்தில் மின்சாரம் தொடர்ந்து வழங்க முடியும் என மின்சார சபையினர் தெரிவித்துள்னர். 

Related Posts