கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்வதால், குறைந்தது 367 பேர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.சமீபத்திய தரவுகளின்படி, 25 மாவட்டங்களில் 316,366 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,151,776 நபர்கள் “தித்வா” புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல பகுதிகள் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் குறிப்பிட்டது.நாடு முழுவதும் நிறுவப்பட்ட 1,564 பாதுகாப்பான தங்குமிடங்களில் 61,612 குடும்பங்களைச் சேர்ந்த 218,526 நபர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. டிக்வா புயல் காரணமாக ஏற்பட்ட இயற்கைப் போிடரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது.இடம்பெயர்ந்தோருக்கான தங்குமிடங்களில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 61,612 என்றும், இடம்பெயர்ந்தோருக்கான தங்குமிடங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 218,526 என்றும் பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் நாடு முழுவதும் 1,564 பாதுகாப்பான மையங்களில் தங்கியுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.
இயற்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு: 367 பேரைக் காணவில்லை!
3
previous post