மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

by ilankai

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட வேத்துச்சேனை, வட்டவளை, நாதனைவெளி, ஓட்டடிமுன்மாரி உள்ளிட்ட பல வயற்கண்டங்களில் பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் இவ்வாறு வெள்ளத்தில் அள்ளுண்டு முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளப் பெருக்கினால் வயல்வெளிகள் அனைத்தும் உடைப்பெடுத்து மீதமுள்ள நெல்நாற்றுக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ள இந்நிலையில் விவசாயிகள் உடைப்பெடுத்துள்ள வரம்புகளை திருத்தி சீரமைத்து வருகின்றனர்.வெள்ள நீர் வடிந்து கொண்டிக்கின்ற இந்நிலையில் வயல் பாதிப்புகள் தொடர்பில் தற்போதைய நிலையில் தொலைபேசி இணைப்புக்கள் சீராக கிடைக்கப்பெறாத போதும், விவசாய அமைப்புக்களுடாக பாதிப்பின் நிலவரங்கள் தொடர்பில் தரவுகளைச் சேகரிக்கும் செயற்பாடுகளை மோற்கொண்டுள்ளதாகவும், அப்பகுதி பெரும்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் தெரிவித்தார்.

Related Posts