சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் ஆறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இன்று (27) காலை நிலவரப்படி 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் இ.எம்.எல். உதய குமார தெரிவித்துள்ளாா். மேலும் பத்து பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவா் , மக்களை ஆபத்தான இடங்களிலிருந்து வெளியேறி அவா்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கோாிக்கை விடுத்துள்ளாா். இதேவேளை காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ள நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
பதுளை நிலச்சரிவுகள் – 16 பேர் உயிரிழப்பு – பலரைக் காணவில்லை – Global Tamil News
2
previous post