வடகிழக்கில் நாட்டப்படும் தொல்லியல் சின்னங்களை அகற்றி இன நல்லுறவை சிதைக்க முற்படுவதாக அரச அமை;சசர்கள் புதிய விளக்கத்தையளித்துள்ளனர்.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் மூவர் நேற்று செவ்வாய்கிழமை இரவு கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர் எனும் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னதாக கைதான பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர் உள்ளிட்ட மூவர் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டிருந்தனர்..இதனிடையே தொல்லியல் பலகை அகற்றல் விவகாரம் பிரதேச சபையின் அதிகாரவரம்பு தொடர்பான பிரச்சினையாகும் . தொல்லியல் எனும் பெயரில் வடகிழக்கில் நிகழ்த்தப்பட்ட மோசமான ஆக்கிரமிப்புக்களை முழுமையாக ஆவணப்படுத்த சிவில் அமைப்புக்கள் அழைப்புவிடுத்துள்ளன.
தொல்லியல்:நல்லிணக்கமில்லையாம்!
11
previous post