எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும் என்பதுடன், அவர்களின் பெற்றோரையும் கௌரவப்படுத்த வேண்டும் என மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மு. மனோகரன் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,மூன்று சிங்கள மாவீரர்களின் தாய் துயிலுமில்ல வாசலில் அவமானப்படுத்தப்பட்டமை தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. அந்த மாவீரர்களின் பெற்றோரும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே ..நான்கு இனத்தவர்களினதும் தியாகத்துடனையே எமது போராட்டம் இறுதி யுத்தம் வரையில் முன்னெடுத்து செல்லப்பட்டது. அதனை எமது மாவீரர்களினது பெற்றோர்களும் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டனர்.ஆனால் புலம்பெயர் உறவுகள் சிலர் மாற்று இனத்து மாவீரர்களை நினைவு கூறும் விடயத்தில் சினம் கொண்டுள்ளனர்.அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூற வேண்டும். அவர்களின் பெற்றோரையும் கௌரவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அனைத்து இன மாவீர்களையும் நினைவு கூர வேண்டும்
10