யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் தவறணையில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் குறித்த குடும்பஸ்தரை தாறுமாறாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 56 வயதுடையவர் குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இன்றையதினம் 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கீரிமலையில் வைத்து சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் மற்றுமொரு சந்தேகநபரும் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தவறணையில் கொலை – ஒருவர் கைது – Global Tamil News
9