கிளிநொச்சி இரகசிய கூட்டத்தை தொடர்ந்து யாழிலும் இரகசிய கூட்டங்களை நடத்த அரசு முற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்  மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை இரவு 8 மணிக்கு இணைய வழியில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சித்திரை மாதம் வரையான கணக்கு அறிக்கையில் ஒதுக்கிய 56 மில்லியன் ரூபா  மற்றும் விசேட வீதி அமைப்பிற்கான நிதிகள் என்பவற்றிற்கு  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் அனுமதியைப் பெறும் நோக்கிலேயே  இரவோடு இரவாக இக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இவ்வாறு இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இக் கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களோ அல்லது பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்  பங்குகொள்ளவோ அல்லது இணைய வழியில் இணைந்துகொள்வதற்கான எந்தவொரு ஏற்பாட்டினையும் மாவட்டச் செயலகம் மேற்கொள்ளவில்லை.

 இதேநேரம் கிளிநொச்சி மாவட்டக் கூட்டமும் ஏற்கனவே இணைய வழியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.