தெற்கில் வலுக்கின்றது எதிர்ப்பு!

by ilankai

தேசிய மக்கள் சக்தி தெற்கில் தொடர்ந்தும் உள்ளுராட்சி சபைகளது அதிகாரங்களை இழந்தேவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடையுந்துள்ளது.கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை, இரண்டாவது முறையாகவும் தவிசாளர் எவ்வித திருத்தங்களும் இன்றி சபையில் சமர்ப்பித்திருந்தார்.அதற்கு தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் ஆதரவாக தமது வாக்குகளை அளித்தனர்.ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பொது முன்னணியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது 04 மேலதிக வாக்குகளால் கந்தகெட்டிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தோல்வியடைந்தது.அதேவேளை புளத்கோ{ஹபிட்டிய பிரதேச சபையின்  2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட வரைவும்  திங்கட்கிழமை (24) அன்று மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.வரவு -செலவுத் திட்ட முன்மொழிவுக்கு  ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர உட்பட 8 பேர் வாக்களித்தனர். அதே நேரத்தில் 11 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன.ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, சர்வ ஜன பலய கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய பெரமுன ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

Related Posts