உள்ளுராட்சி மன்றங்களது அதிகாரங்களின் பிரகாரம் அனுமதியற்ற விளம்பரப்பலகைகள்; அகற்றபட்டதாக கோறளைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது.கிழக்கின் கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எச்சரித்துள்ளார்.சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் சட்டத்தை கையிலெடுத்து இந்த செயற்பாட்டில் ஈடுபட்டோர் மீது நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு, கிழக்கு, தெற்கிற்கும் ஒரே சட்டம் தானென்றும் அதனை எவரும் மீறக்கூடாதென்றும் தெரிவித்துள்ளார்.கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் “தொல்லியல் இடம்“ என்ற பெயர்ப் பலகைகளை அமைக்கப்பட்டிருந்தன.கிரான் பிரதேசத்தில் குடும்பிமலை உட்பட்ட மலை பிரதேசங்கள், பழமை வாய்ந்த ஆலயங்கள், வயல் வெளிகள் போன்ற இடங்களில் காணப்படும் மக்கள் போக்குவரத்து செய்யும் வீதியில் உள்ள சந்திகளில் இப் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அனுமதியற்ற பெயர் பலகையினை அகற்றும் நடவடிக்கையில் பிரதேசசபை ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது!
1
previous post