யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் கைதான கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உள்ளிட்ட இரு மாணவர்களும் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெளிமாவட்ட பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரை காவற்துறையினர் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் போது முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கியதை அடுத்து இருவரையும் சோதனையிட்ட போது , அவர்களின் உடைமையில் இருந்து போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன அதனை அடுத்து இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஒருவர் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் எனவும் மற்றையவர் ஊரெழு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவன் எனவும் தெரிய வந்துள்ளது கொழும்பு மாணவனின் உடைமையில் இருந்து 1700 போதை மாத்திரைகளும் , யாழ் , மாணவனிடம் இருந்து 200 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டதாகவும் , விசாரணைகளின் பின்னர் இருவரையும் , யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , இருவரையும் அச்சுவேலியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு பிரபல பாடசாலை மாணவன் போதை மாத்திரைகளுடன் யாழில் கைது! – Global Tamil News
9