பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் இடம்பெற்ற பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டிக்கு இந்திய மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் முன்னேறி இருந்தன. இரு அணிகளுக்குமான இறுதிப்போட்டி இன்று இலங்கையில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பாடிய நேபாள அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களை பெற்றது. நேபாளம் அணியில் அதிகபட்சமாக சரிதா கிம்ரே 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், இந்திய அணி சார்பில் அனுகுமாரி, ஜமுனா ராணி தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனை தொடர்ந்து இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் புலா சரேன் அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ளது.
பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது! – Global Tamil News
1