மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாவது அமர்வில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது மற்றும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையை முன் வைத்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை முழுவதும் இன்று குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் நடைபெற்றன ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர் பகுதிகளுக்குள் படையெடுக்கும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை அழிக்கின்றன.மின் குமிழ்களை திருடிச் செல்கின்றன, சி. சி. டிவி கமராக்களை உடைக்கின்றன, பிரதேச சபையினால் போடப்பட்ட மின் குமிழ்களை எடுத்துச் செல்கின்றன. தொலைத்தொடர்பு இணைப்புக்களை துண்டிக்கின்றன. பலன் தரும் மா, தென்னை மரங்களை அழிக்கின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான சொத்தழிவுகள் ஏற்படுகிறது. அத்தோடு பல கிராமங்களில் பொதுமக்களை குரங்குகள் கடித்துள்ளன. குரங்கு கடியால் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.இன் நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பு வாய்ந்த பிரதேச சபை என்ற வகையில் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது எமது கடமையாக உள்ளது.
துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை
5
previous post