மதுரை மீனாட்சி அம்மனை தாிசனம் செய்த ரணில் by admin November 22, 2025 written by admin November 22, 2025 இந்தியாவிற்கு சென்றுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசிப்பை இன்றைய தினம் சனிக்கிழமை (22) மேற்கொண்டுள்ளனர்.தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.. அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டதை தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். எனினும் இந்திய ஊடகங்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதும் ஊடகங்களுக்கு எவ்வித பதிலும் கூறாது அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Related News
மதுரை மீனாட்சி அம்மனை தாிசனம் செய்த ரணில் – Global Tamil News
8