மாற்று அவயங்களை பொருத்த சென்னை சென்றவர்கள் நாடு திரும்பினர் – Global Tamil News

by ilankai

நவீன தொழில் நுட்பத்தினூடாக தயாரிக்கப்பட்ட மாற்று அவயவங்களை பொருத்திக் கொள்வதற்காக கடந்த 28 ஆம் திகதி யாழில் இருந்து சென்னை சென்ற  அவயவங்களை இழந்த குழுவினர்களுக்கான மாற்று அவயவங்கள் பொருத்தப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக இன்றைய தினம் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளனர். யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில், கனடா வாழ் மக்களின் பங்களிப்புடன் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த இரண்டாவது தொகுதியினர் மாற்று அவயவங்கள் பொருத்திக் கொள்வதற்காக சென்னை சென்றிருந்தது. கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது வடக்கு கிழக்கில்  அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக வடக்கு கிழக்கை சேர்ந்த 32 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். அவர்களே மாற்று அவயங்களை பொருத்திக்கொண்டு நாடு திரும்பியுள்ளனர்

Related Posts