பாகிஸ்தான் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 16 பேர் பலி! – Global Tamil News

by ilankai

பாகிஸ்தானில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் பைசலாபாத் நகரில் அமைந்த மாலிக்பூர் பகுதியில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் குறித்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 25 க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தொழிற்சாலையில் இருந்த கொதிகலன் திடீரென வெடித்துள்ளது. வெடி விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது, 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 7 பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts