1
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நால்வரை காவல்துறையினா் கைது செய்துள்ளனர். குருநகர் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கும்பல் ஒன்று போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கும்பலை சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரிடமிருந்தும் ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டுள்ள காவல்துறையினா் கைது செய்யப்பட்ட நால்வரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து , கும்பலின் ஏனைய வலையமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.