கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் -நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம் –...

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் -நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம் – Global Tamil News

by ilankai

மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைந்துள்ளமையால் , துயிலும் இல்ல வாயிலுக்கு முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் , துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. ஈகைச்சுடரினை , இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் கற்களுக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.   அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. இதேவேளை தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதுபொது ஈகைச்சுடரினை , மாவீரரின் தந்தையான தம்பிராசா ஏற்றி வைத்ததை தொடர்ந்து , கல்லறை உருவகத்திற்கு, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதேவேளை நினைவாலயத்தில் மாவீரர்களின் உருவ படங்கள் சிலவும் பெற்றோரினால் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும்  மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

Related Posts