திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தனது வயலுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு காவல் காப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற தவிசாளர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.இதனால், அவரது குடும்பத்தினர் இன்று காலை வயலுக்குச் சென்று தேடியபோது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட பிரகாத் தர்மசேன, அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்டு அதிக வாக்குகளால் வெற்றி பெற்று கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளராக தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
8
previous post