சோலர் நிறுவனம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் மகன் சாரங்கனுக்கு 30 மில்லியன் பணம் கொடுத்து அனுமதி பெற்றதென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை சாரங்கன் மறுதலித்துள்ளார். அவ்வாறு ஒரு புதிய கட்டுக்கதையை கூறியிருப்பதாகவும் சிறீதரன் சாரங்கன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். நீங்கள் என்னை பற்றி சொன்ன விடயத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தால் பகிரங்கமாக வெளியிட முடியுமா? அல்லது உறுதிப்படுத்த முடியுமா? உங்களுக்கு திராணி இருந்தால் நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் பதுங்கியிருந்து நீங்கள் சொன்ன அதே கருத்தை பொதுவெளியில் பகிரங்கமாக சொல்லுங்கள், நான் சட்ட ரீதியாக அப்படி எந்த பணம் பெறவில்லை என்று அல்லது குறித்த நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நிரூபித்து காட்டுகிறேன் எனவும் சிறீதரன் சாரங்கன் சவால் விடுத்துள்ளார். உங்கள் கருத்தில் உண்மை இருந்தால் பொதுவெளியில் கருத்தையோ ஆதாரத்தையோ வெளியிட தயங்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன் எனவும் சிறீதரன் சாரங்கன் தெரிவித்துள்ளார்.
இலஞ்சமா? பொய்க்குற்றச்சாட்டு: மறுக்கிறார் சாரங்கன்!
5
previous post