தாந்தாமலை தொல்லியல் இடம்?

by ilankai

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் இன்று (20) தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது .அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாப்பது வட்டை சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறி காட்டி போடப்பட்டதுடன் மற்றய அறிவித்தல் பலகை தாந்தாமலை முருகன் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள பொலிஷ் சாவடி நிலைய சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.திருகோணமலையில் அத்துமீறி  புத்தர் சிலைவைக்கப்பட்டு சரியாக மூன்று தினங்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப்பெருநிலத்தில் இந்த விளம்பரப்பலகையிடப்பட்டு தாந்தாமலை தமிழரர்களின் பூர்வீக நிலத்தில்  தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் பௌத்த விகாரைகளை நிறுவும் திட்டமாக இந்த விளம்பர அறிவிப்பு இடப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது..

Related Posts