வலி. வடக்கில் மாவீரர்களுக்கு அஞ்சலி – Global Tamil News

by ilankai

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சபை அமர்வுகள் ஆரம்பமானது. வலி வடக்கு பிரதேசசபையின் மாதாந்த சபை அமர்வுகள் வலி வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.பிரதேசசபை அமர்வு ஆரம்பிக்க முன்னதாக மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.    சபா மண்டபத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர்களுக்கு நினைவுச்சுடரேற்றி நினைவேந்தப்பட்டது.  இதில் கட்சிபேதம் கடந்து அனைத்து உறுப்பினர்களும் நினைவஞ்சலி செலுத்தினர்.

Related Posts