ஆமதாபாத் விமான விபத்தில் சிக்கிய பயணியின் உறவினர் கூறுவது என்ன?ஆமதாபாத் விமான விபத்தில் சிக்கிய பயணியின் உறவினர் கூறுவது என்ன?

12 ஜூன் 2025, 13:42 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆமதாபாத் விமான விபத்தில் சிக்கிய ஒரு பயணியின் உறவினர் சிவில் மருத்துவமனையின் முன்பாகக் காத்திருந்தார். அவர் லண்டனுக்கு சென்றுகொண்டிருந்த தனது உறவினர் இந்த விமானத்தில் இருந்ததாகக் கூறினார்.

மேற்கொண்டு பேசியவர், “என்னுடைய உறவினர் லண்டனுக்கு சென்றுகொண்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்குள் விமானம் விழுந்துவிட்டதாக எனக்கு செய்தி வந்தது. ஆமதாபாத்தை விட்டு கிளம்பிவிட்டேன். தற்போது மீண்டும் இங்கே வந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

அதிகாரிகளிடம் இருந்து எதுவும் உதவி கிடைத்ததா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, “எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எங்களால் மருத்துவமனைக்குள் செல்ல முடியவில்லை” என்று கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு