யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு அடிமையான இருவர் , போதைப்பொருள் பாவனை காரணமாக வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டு , வீட்டை விட்டு வெளியேறி நகர் பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றினை பெற்று தங்கியுள்ளனர். அறையில் தங்கியிருந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தமது வருமானத்திற்காகவும் , மேலும் போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும் , போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பிலான தகவல்களை அறிந்த மாவட்ட போதைத்தடுப்பு பிரிவினர் , வாடகைக்கு அறை எடுத்து ,தங்கி இருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போது , அவர்களிடம் இருந்து போதைப்பொருளை மீட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களின் போதைப்பொருள் வலையமைப்பை சேர்ந்த மேலும் 06 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்தும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 08 பேரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில். வாடகைக்கு அறை எடுத்து போதைப்பாவனை – கூண்டோடு அள்ளிய பொலிஸ்
4