5
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நவம்பர் 11 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆசி பெறுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு செவ்வாய்க்கிழமை (18) சென்றிருந்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்யும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.எனவே, மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். # Mahinda Rajapaksa