4
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக சுன்னாகம் காவல் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சுன்னாகத்தில் தனியார் காணிகளில் இயங்கி வந்த காவல் நிலையம் கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடக்கம் புதிய இடத்தில் இயங்கி வருகிறது.
அந்நிலையில் யாழில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக புதிய காவல் நிலைய வளாகம் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது. வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் , மழை தொடர்ந்து பெய்யுமாயின் காவல் நிலையத்தினுள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளதால் , அதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
The post வெள்ளத்தில் மூழ்கிய சுன்னாகம் காவல் நிலையம் appeared first on Global Tamil News.