Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எந்த வகையிலும் பதிலடி கொடுக்கத் தயங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உயர்மட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக பெல்ஜியம் தலைநகரம் பிரஸ்ஸல்ஸுக்கு சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர். செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்தபோது,
பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஆழமாக இருந்தால், நாங்கள் பாகிஸ்தானுக்குள் இன்னும் ஆழமாகச் செல்வோம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரச கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதில் மிகவும் மூழ்கியிருக்கும் ஒரு நாடு. அதுதான் இங்கே முழுப் பிரச்சினை. பயங்கரவாதத்துக்கான உறுதிப்பாட்டை பதற்றத்தின் ஆதாரம் என்று நீங்கள் அழைத்தால், அது நிச்சயமாக பதற்றம்தான்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப் படைத் தாக்குதல்கள், பாகிஸ்தானின் இராணுவ உள்கட்டமைப்பை கடுமையாக சீரழித்துவிட்டன. வெளிப்படையாக சொன்னால் என்னைப் பொறுத்தவரை, ரஃபேல் இதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. மற்ற அமைப்புகளும் பயனுள்ளதாக இருந்தன. இதற்கு சான்று பாகிஸ்தான் தரப்பில் அழிக்கப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட விமான நிலையங்கள்தான் என்றார்.