5
மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம் நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.அத்துடன் திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.