தமிழ் தேசிய புரட்சிப்பாடல்களை ஒலிக்க வைத்து ரிக்ரொக் வீடியோக்களை தயாரித்து அப்பாவி இளைஞர் யுவதிகளை இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் சிக்க வைக்கும் இராணுவ புலனாய்வு எடுபிடிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.தற்போது தாயமெங்கும் மாவீரர் தின நினைவேந்தலிற்கு தேசம் தயாராகிவருகின்றது.இந்நிலையிலேயே மாவீரர்கள் நினைவேந்தல் பாடல்களை பயன்படுத்தி அப்பாவிகளை தொடர்புபடுத்தி வீடியோக்களை தயார்படுத்தி வெளிவிடுவதும் பின்னர் அதனை தாம் தொடர்புபட்ட இராணுவ புலனாய்வு அல்லது காவல்துறை புலனாய்வாளர்களிடம் கோர்த்துவிடுவதும் இவர்களது வேலையென தெரியவந்துள்ளது.அவ்வாறான காணொளிகளை தயாரித்து பின்னர் அப்பாவிகளை மாட்டிவிடுவதும் காப்பாற்றிவிடுவதாயின் இலட்சங்களில் கையூட்டுப்பெறுவதும் அவர்களது நடவடிக்கையென கூறப்படுகின்றது.இத்தகைய நடவடிக்கைகளில் வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு மற்றும் கெருடாவில் பகுதிகளை சேர்ந்த நரேஸ் மற்றும் ராஜன்பாபு எனுமிருவர் பங்கெடுப்பதாக கூறப்படுகின்றது.அவர்களது ரிக்ரொக் காணொளிகள் சிலவும் தற்போது வெளிவந்துள்ளது.
இயக்கப்பாட்டுக்கு சிறை?
8
previous post